modi trump redcarpet - 2026

மோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அவரோடு தென்பட்டார் ஒரு இந்தியப் பெண்மணி. டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி, மெலானியா டிரம்ப்.. இவர்களோடு சேர்ந்து சிவப்பு கம்பள விரிப்பின் மீது அகமதாபாத்தில் நடந்து வந்தார்.

பலம் பொருந்திய இரு உலகத் தலைவர்களோடு தென்பட்ட அந்த பெண்மணி தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளார். அவர் குர்தீப் கௌர் சாவ்லா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வசிப்பவர்.

modi trump redcarpet1 - 2026

பிரதமர் மோடியின் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார். அமெரிக்க மொழிபெயர்ப்பு அசோசியேஷனின் உறுப்பினராக உள்ளார். மோடியிடம் மட்டுமல்ல. 7 பிரதமர் களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். விபி சிங், சந்திரசேகர், பிவி நரசிம்மராவ், அடல் பிகாரி வாஜ்பாய், ஐகே குஜரால், மன்மோகன்சிங் இவர்களிடமும் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

பிரதமர் எங்கு சென்றாலும் உடன் செல்வது இவருடைய முக்கிய பணி. பிரதமரின் ஹிந்தி சொற்பொழிவை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அந்தந்த நாட்டு பிரதிநிதிகளிடம் விவரிப்பார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending