ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
petition by mavenkatesan - 2026

திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.

திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய போது, உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக தாழ்த்தப் பட்டோர் வந்தது, திமுக., போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆயினும், தலித் கட்சிகள் என்றும் தலித் இயக்கங்கள் என்றும் கூறி அரசியல் நடத்தும் திமுக., கூட்டணிக் கட்சிகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எஸ்.ஆர். பாரதி சொன்னது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில், பாஜக.,வின் எஸ்சி பிரிவினர் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், இதுகுறித்து புகார் மனுவையும் அளித்துள்ளனர். இன்று (25-2-2020) தில்லியில் உள்ள தேசிய எஸ்சி ஆணையத்தில் பட்டியல் சமூக மக்களை இழிவுபடுத்தி பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக பாஜக., எஸ்சி பிரிவின் மாநிலத் தலைவர் ம.வெங்கடேசன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தேசிய எஸ்சி ஆணையரின் தனிச் செயலர் கேப்டன் பிரபான்ஸு ஸ்ரீவத்ஸவ்விடம் இந்தப் புகார் மற்றும் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.