கபிலைப் போலவே ரன்வீர்! வியப்பில் ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்!

இந்தியா பொது தகவல்கள் விளையாட்டு
ranveer - 2026

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான ரன்வீர் சிங். இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் தன் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் ரன்வீர் சிங். இவர் பிரபல இந்தி நடிகர் தீபிகா படுகோனின் கணவர்.

இவர் நடிக்க வந்து பத்து வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் செய்யும் வசூல் சாதனையை இவர் படங்கள் செய்கின்றன.

மேலும் குறுகிய காலத்தில் பல வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடித்த முதல் திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இவர் நடித்து உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படங்கள் பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத். பிலிம்பேர் விருதை மூன்று முறை பெற்றுள்ளார் நடிகர் ரன்வீர் சிங்.

kabil - 2026

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று உலகக்கோப்பை கைபற்றியது அதனை படமாக எடுத்து வருகின்றனர். அதில் ரன்வீர் சிங் கேப்டன் கபில் தேவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

அந்த படத்தில் ரன்வீர் சிங்கின் தோற்றத்தை பார்க்கும் பொழுது அச்சு அசலாக கபில் தேவ் போலவே உள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கபில் தேவ் உலக்கோப்பையை பெற்றவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அந்த சமயத்தில் வெளியானது, அதே போல இப்படத்தில் ரன்வீர் சிங் கோப்பையை பெறுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அச்சு அசல் கபில்தேவ்வை பார்ப்பது போலவே உள்ளது என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ந்தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.