கணவருடன் சண்டை.. இரவு முழுதும் டெம்போவில்.. வீட்டை விட்டு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
vankodumai 1 - 2026

புனே அருகே, ஓடும் டெம்போவில் இரவு முழுவதும் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த 11ம் தேதியன்று தனது கணவனிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.

திக்கு தெரியாமல் எங்கேயோ சென்ற அந்த பெண் இரவு ஆனதும் வீடு திரும்ப விரும்பினார்.இரவு 11 மணியளவில் அந்த பெண் நடந்து சென்ற ஆலந்தி சாலையில் ஒரு டெம்போ வந்தது.

டெம்போவை கைகாட்டி நிறுத்திய அந்த பெண் தனது வீட்டு முகவரியை கூறி அங்கு தன்னை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார். டெம்போவில் இருந்த டிரைவரும் கிளீனரும் அந்த பெண்ணை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.

tempo - 2026

ஆனால், அந்த பெண் குறிப்பிட்ட முகவரிக்கு டெம்போவை ஓட்டிச் செல்லாத அவர்கள் மோஷி, பிம்ப்ரி-சிஞ்ச்வட், ஹிஞ்சேவாடி, பூனாவலே என பல இடங்களுக்கு டெம்போவை ஓட்டிச் சென்றனர்.

ஓடும் டெம்போவிலேயே இரவு முழுவதும் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணை விரைவு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானம் அருகில் கீழே இறக்கி விட்டுவிட்டு டிரைவரும் கிளீனரும் டெம்போவை ஓட்டிச் சென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் சிர்காவ் காவல் நிலையத்துக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து புகார் செய்தார்.புகாரை பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் ஆலந்தி பகுதியில் நடந்தது என்பதால் ஆலந்தி காவல் நிலையத்துக்கு புகாரை அனுப்பி வைத்தனர்.

ஆலந்தி காவல்த்துறையினர் வழக்குப் பதிவு செய்து டெம்போ டிரைவர் மற்றும் கிளீனரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.