இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தொட்ட நிலையில், கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார். மோடியுடனான வீடியோ கான்பரன்சை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.
பிரதமருடன் ஆலோசனை முடிந்த பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசித்தார்.
‘கொரோனா’ வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ‘வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, நாடு முழுவதும் அனைத்து முதல்வர்களும் இதில் பங்கேற்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்த நிலையில், இதற்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நோய்ப் பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரதமருடனான ஆலோசனைக்குப் பின்னர், தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பது குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.