December 8, 2024, 9:50 AM
26.9 C
Chennai

டாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்!

மர்க்கசில் இருந்து தனிமைப்படுத்தல் மையத்துக்குச் சென்றவர்களின் அசிங்கமான அருவருப்பான நடவடிக்கைகளும் பேச்சுக்களும் இப்போது ஊடகங்களின் வழியே பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

மர்கஸில் இருந்து 36 மணி நேரத்தில் 2361 பேரை காலி செய்ய வைத்தார்கள். அவர்களில் 617 பேரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மீதி இருப்பவர்களை குவாரண்டைனுக்கு அனுப்பினார்கள். ஆனால் குவாரண்டின் சென்டரில் சிலர் டாக்டர்களும் மற்றும் சிப்பந்திகள் மீது அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள்.

மார்ச் மாதத்தில் தில்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மதப் பிரார்த்தனை நிகழ்ச்சி நாட்டில் கரோனா வைரஸ் களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காரணமாக ஆகிவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஈ ஜமாத் மர்கஸில் இருந்த 2361 பேரை கடந்த 36 மணி நேரத்தில் அங்கிருந்து காலி செய்வித்தார்கள். இவர்களில் நிறைய பேரை “டீசல் ஷெட் ட்ரைனிங் ஸ்கூல் ஹாஸ்டல்” குவாரண்டின் சென்டருக்கு அனுப்பினார்கள்.

இஸ்லாமிய மதப் பிரார்த்தனை சபையில் கலந்து கொண்ட இவர்கள் குவாரண்டைன் சென்டரில் சிப்பந்திகளிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களை வாயில் வந்தபடி திட்டி உள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். உணவு விஷயத்தில் ஏதேதோ வேண்டும் என்று டிமாண்ட் செய்துள்ளார்கள் என்றும் கூறினார். இதே விஷயத்தை வடக்கு ரயில்வே சீஃப் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபீஸர் தீபக் குமார் தெளிவாக உறுதி செய்தார்.

ALSO READ:  36 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து!

மர்க்கஜில் இருந்து வந்தவர்கள் டாக்டர்கள் மீதும் அங்கிருந்த ஊழியர்கள் மீதும் எச்சில் துப்பினார்கள் என்றும் குவாரண்டின் வளாகம் எங்குமே எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி உள்ளார்கள் என்றும் தீபக் குமார் தெரிவித்தார். ஹாஸ்டல் பில்டிங்கில் எங்கு பார்த்தாலும் சுற்றித் திரிந்தார்கள் என்றும் எல்லா இடத்திலும் காரித் துப்பினர்கள் என்றும் கூறினார். அவர் தெரிவித்த விவரங்களின்படி தப்லீக் ஜமாத்தில் இருந்து செவ்வாய் அன்று இரவு 9.40 மணிக்கு 167 பேர் துக்லகாபாத் குவாரண்டைன் சென்டருக்குக்கு அழைத்து வந்தார்கள். இவர்களில் 97 பேரை டீசல் ஷெட் ட்ரைனிங் ஸ்கூல் ஹாஸ்டல் குவாரண்டைன் சென்டருக்கு அனுப்பினார்கள். 70 பேரை ஆர்பிஎஃப் பராக் குவாரண்டைன் சென்டரில் இருத்தினார்கள்.

நிஜாமுதீன் மேற்கில் உள்ள தப்லீக் ஈ ஜமாத் மர்கஜிலிருந்து 2361 பேரை காலி செய்வித்ததாக டில்லி டிப்யூடி சிஎம் தெரிவித்தார். இவர்களில் 617 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீதி உள்ளவர்களை குவாரண்டின் சென்டருக்கு அனுப்பியதாகவும் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 376 பேருக்கு கோவிட் 19 பரவி உள்ளதாக மத்திய ஆரோக்கிய துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  மதுரை மாவட்டத்தில் கன மழை!

நாட்டில் மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1637ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 38ஐ சேர்ந்துள்ளது. புதிதாக கோவிட் 19 நோயில் சிக்கியவர்கள் நிறைய பேர் டெல்லியில் நடந்த ஜமாத்து சபையில் பங்குகொண்ட இஸ்லாமியர்கள் என்று தெரிவித்துள்ளது.

author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ALSO READ:  தேசிய நெல் திருவிழா: 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week