கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளம்பெண்! மருத்துவர்களால் வன்கொடுமை! உயிரிழந்த கொடூரம்!

vankodumai 1 - 2026

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு புறமிருக்க, பீகாரில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பீகாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் மார்ச் 25-ம் தேதி பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்திலிருந்து தனது கணவரின் தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். 2 மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் கயா மாவட்டத்துக்குப் புறப்படுவதற்கு முன் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இந்நிலையில், கயாவில் இருக்கும் தனது மாமியார் வீட்டுக்கு வந்த நிலையில் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள அனுராக் நரைன் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தப் பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில், ஏப்ரல் 1-ம் தேதி அன்று கொரோனா தனிமைப்படுத்தும் வார்டில் மருத்துவமனை நிர்வாகம் அவரை தனிமைப்படுத்தியுள்ளது.

அடுத்த சில நாள்களில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில், கொரோனா வைரஸின் தொற்று அவருக்கு ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால், அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 6-ம் தேதி அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் மாமியாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு யாருடனும் சரியாகப் பேசாமல் அதிக பயத்துடன் இருந்தார்.

இது குறித்து மருமகளிடம் விசாரித்த போது, தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வார்டில் மருத்துவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக அவர் தெரிவித்தார்’ என்றார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணின் மாமியாரைக் காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டும்படி கூறியுள்ளனர். இருப்பினும், அவர்களால் குற்றவாளியைச் சரியாக அடையாளம் காட்ட இயலவில்லை.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டினுள் நுழைந்ததாக இருவர் கயா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

விசாரணையில், ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மருத்துவர் உடையிலும் மருத்துவ கிட்களுடனும் ஐசோலேஷன் வார்டுக்குள் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories