குடிமகன்களுக்கு ஆளுக்கு ஒரு பெக் மது தானம் செய்த இளைஞர்.
ஏப்ரல் 30 வரை லாக்டௌன் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அதனால் ஹைதராபாத் முதல் அனைத்து நகரங்களிலும் வந்தேறிய கூலிகளின் பசியை தீர்ப்பதற்கு அன்னதானங்கள் நடந்து வருகின்றன.
ஆனால் நேற்று ஒரேடியாக குடிமகன்களுக்கு மதுவை ஊற்றி அவர்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றார் ஒரு இளைஞர்.
லாக்டௌன் பின்னணியில் அனைத்து மதுக்கடைகளும் மூடி உள்ளதால் குடிமகன்கள் படும் அவஸ்தைகளை அடையாளம் கண்ட ஒரு இளைஞர் அவர்கள் எர்ரகட்டா பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு க்யூவில் நிற்பதை அறிந்து கொண்டார். அதனால் அந்த இளைஞர் லிக்கர் தானத்தைச் செய்ய முன்வந்தார்.
சாலை அருகில் வசிக்கும் கூலிகள் மற்றும் பிறருக்கு அவர் இலவசமாக மதுவை பகிர்ந்து அளிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பாத்தபஸ்தி சம்பாபேட்டையில் நடந்தது. சம்பாபேட்டையில் ஒயின் ஷாப்புகளைச் சுற்றிலும் அலைந்தபடியே எப்போது கடைகளைத் திறப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏங்கி இருக்கும் குடிமகன்களுக்கு குமார் என்ற உள்ளூர் இளைஞர் ஒவ்வொருவருக்கும் ஒரு பெக் மதுவை ஊற்றி அவர்களின் தாகத்தை தீர்த்தார். சுமார் 10 ஃபுல் பாட்டில்கள் இவ்வாறு ஊற்றியதாக கூறுகிறார்கள்.
மதுபானம் பெற்றவர்களில் பெண்கள் கூட அதிக அளவில் இருந்தது விசேஷம்.
இந்த சமயத்தில் மதுவை அனைவருக்கும் பகிர்ந்தளித்த இளைஞனை அவனுடைய உதார குணத்திற்கு குடிமகன்கள் அனைவரும் வணங்கி நன்றி கூறிச் சென்றார்கள்.