நடக்கவிருந்த திருமணம்! கொரோனா போராட்டத்திற்காக ஒத்திவைத்த மணமக்கள்!

இந்தியா பொது தகவல்கள்

.

police - 2026

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவுவதை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இரவு பகல் பாராமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

nurse 1 - 2026
கோப்பு படம்

இந்நிலையில் கேரளா, திருவனந்தபுரம் கனியகுளங்கரா காவல்நிலையத்தில் பணியாற்றுபவர் பிரசாத். இவருக்கும் அரசு சுகாதார மையத்தில் மருத்துவமனையில் பணியாற்றிய ஆர்யா என்பவருக்கும் இந்த மாதம் திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்திருந்தனர். மேலும் கொரோனா ஊரடங்கால் மிக எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.

marriage - 2026

ஆனால் தற்போது பிரசாத் மற்றும் ஆர்யா இருவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வரும்நிலையில் தங்களது பணிக்கு இடையூறாக இருக்கும் என கருதிய அவர்கள் தங்களது திருமணத்தை தள்ளிப்போட முடிவு செய்தனர். அதன்படி இருகுடும்பத்தாரின் அனுமதியின்படி அவர்களது திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.