பிரசவ வலியால் துடித்த பெண்.. வழியிலேயே வெளியே வந்த தலை.. சாலையோர பிரசவம்!

இந்தியா பொது தகவல்கள்
auto chandran 4 3 1 1 - 2026

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியின் சாலையோரத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். இங்கு கூடாரம் அமைத்து வசித்து வந்த 26 வயதான பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அந்த பெண்ணை அவரின் கணவர் பாதி தூரம் தூக்கி செல்ல அங்கு அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அந்த பெண்ணை உட்கார வைத்துவிட்டு ஆம்புலன்ஸூக்கு போன் செய்துள்ளார். அதற்குள் இந்த விவரம் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் லாக் அப் புத்தகம் எழுதிய எழுத்தாளர் சந்திரனுக்கு சென்றுள்ளது.

auto chandran 4 2 2 1 1 1 - 2026

எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைத்த நிலையில் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி அந்த பெண்ணுக்கு சாலை ஓரத்திலேயே சந்திரன் பிரசவம் பார்த்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
auto chandran 4 1 1 1 - 2026

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை அறுத்து தாய்,சேய் இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.