கொரோனா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை உண்ட மருத்துவர் மரணம்!

இந்தியா பொது தகவல்கள்
dr hydroclosi 1 1 - 2026

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைத்து முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்ட நிலையில், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், முன்னெச்சரிக்கையாக அந்த மாத்திரையை சாப்பிட்ட மருத்துவர் உத்பல் பர்மன் (43) கடந்த ஞாயிறன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவர் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொண்டதை அவரது நண்பர், மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

பொதுவாக இதயம் சார்ந்த உடல் நலப் பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த மருந்தை பரிந்துரைப்பது இல்லை என்றும், மருத்துவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்து வந்த நிலையில், அவர் அதற்கு சரியாக மருந்து சாப்பிட்டு வந்தாரா என்பதும் தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.