ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., உள்பட 38 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Published:

corona worldwide

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து அதிகாரிகள் நடைமுறைப் படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பொது சேவைப் பிரிவில் இருக்கும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. டி.ஆர்.ஓ உள்பட 38 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் , ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,80,532லிருந்து 3,95,048ஆக உயர்ந்துள்ளது.  அதே நேரம், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை2,04,711லிருந்து 2,13,381ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,573ருந்து 12,948ஆக உயர்ந்துள்ளது என்று, மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,57,748ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் கொரோன வைரஸின் பாதிப்பில்  இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46,25,445ஆக உயர்ந்துள்ளது. .

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உலக அளவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,519ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.  அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 22,97,190ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,407ஆக உயர்ந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img