3 மணி நேரம்தான்… இரண்டரை லட்சம் லட்டுகள் விற்பனையாகி… சாதனை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
thirupathi laddu
thirupathi laddu

வெறும் 3 மணி நேரத்தில் 2.4 லட்சம் திருப்பதி லட்டுகள் ரெக்கார்டு அளவில் விற்பனையாயின.

கரோனா வைரஸ் பின்னணியில்… மாநில அளவில் திருப்பதி லட்டுக்களை திதிதே பக்தர்களுக்கு அளித்து வருகிறது. குண்டூரில் உள்ள டிடிடி கல்யாண மண்டபம் ரெட்ஜோனில் இருப்பதால் அங்கு விற்பனை நடக்கவில்லை. மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் டிடிடி மண்டபங்களில் மட்டும் லட்டு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

இன்று மீண்டும் இரண்டு லட்சம் லட்டுகள் மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார்கள்.

thirupathi laddu
thirupathi laddu

மறுபுறம் லட்டுக்கள் வேண்டும் என்று தமிழ்நாடு தெலங்காணா பக்தர்களிடமிருந்து கூட விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு ஒரு லட்சம் லட்டுகள், தெலங்காணாவுக்கு 50,000 லட்டுகளும் அனுப்பப் போவதாக திதிதே தீர்மானித்துள்ளது.

அனந்தப்பூரில் திருப்பதி லட்டு வாங்குவதற்கு கியூ வரிசையில் நின்ற பக்தர்கள். ஸ்ரீ வாரி லட்டுவுக்காக கியூவில் நின்ற ஏராளமான பக்தர்கள் மத்தியானதிற்குள்ளேயே 20 ஆயிரம் லட்டுகளும் விற்பனை ஆகி விட்டதால் ஏமாற்றமடைந்தனர். இன்று மீண்டும் லட்டுகளை அனுப்பப் போவதாக டிடிடி நிர்வாகிகள் அறிவித்தார்கள்.

இரண்டு மாதங்களாக திருமலை பெருமாளின் தரிசனம் கிடைக்காமலும் பவித்திரமாக எண்ணும் லட்டு பிரசாதம் கிடைக்காமல் போனதாலும் பக்தர்கள் மிகவும் வருந்தினர். ஆனால் லட்டு பிரசாதத்தை மாவட்ட கேந்திரங்களுக்கு எடுத்து வந்து விற்பனை செய்ததால் பக்தர்கள் கியூ வரிசையில் நின்றார்கள். உள்ளூர் கேந்திரங்களுக்கு மட்டுமே எடுத்து வந்து விற்பனை செய்து வருவதால் பக்தர்கள் பெருமளவில் வந்தார்கள்.

திங்கள்கிழமை அனந்தப்பூர் ராமச்சந்திரா நகரில் உள்ள டிடிடி கல்யாண மண்டபத்தில் காலையிலிருந்து ஸ்ரீவாரி லட்டுகள் விற்பனை நடந்தது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து மாவட்ட கேந்திரங்களுக்கு 20 ஆயிரம் லட்டுகள் வந்தாலும் மத்தியானதிற்குள்ளேயே தீர்ந்துவிட்டதால் மிகப் பெருமளவில் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

thirupathi laddu
thirupathi laddu

திருமலையிலிருந்து பிரத்தியேக அதிகாரியாக வந்த ஏஈஓ ராஜேந்திரகுமார், மாவட்ட தர்ம பிரசார மண்டலி தலைவர் ஸ்ரீபாத வேணு, காரியதரிசி நாகேஸ்வரி, டிடிடி மேனேஜர் ராம்மோகன் ரெட்டி மற்றும் சிலர் உரையாடுகையில் சுவாமி தரிசனம் இன்றி வருந்தும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி லட்டுகளாவது கொடுக்கலாம் என்ற உத்தேசத்தோடு அரசாங்கம் இதுபோன்ற தீர்மானம் எடுத்துள்ளதாக கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.