05/07/2020 1:57 AM
29 C
Chennai

சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்கள்! மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த பரிதாபம்!

சற்றுமுன்...

ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!

ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்

‘ஜியோமீட்’ செயலி! ஜூம்-க்கு மாற்றாக அறிமுகம்! ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை!

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

போபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!

செவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.
veri dag

தெலுங்கானா மாநிலத்தில் நாய்க்கடிக்கு ஆளான 6 வயது பெண் குழந்தை, மருத்துவமனைகளின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடுப்பால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹோலி என்பவரின் 6 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது 5 வெறிநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அருகில் இருந்தவர்கள் கடுமையாகப் போராடி அந்த நாய்களை விரட்டியுள்ளனர். இதனையடுத்து நாய்க்கடியால் அதிக ரத்தப்போக்குடன் இருந்த குழந்தையை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இது போல் 2 மருத்துவமனைகளில் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட பின்னர் அந்தக் குழந்தை நல்லகுந்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் நிலோபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாகவா அல்லது கடுமையான காயங்களைக் கண்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்து விட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் உயிருக்குப் போராடிய குழந்தையை மருத்துவமனைகள் அலட்சியமாக கையாண்டதாக குழந்தையின் தந்தை ஹோலி கண்ணீருடன் தெரிவித்தார்.போடுப்பல் நகரில் வெறிநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படும் என்று போடுப்பல் மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். எது எப்படியோ நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வெறிநாய்களால் கடித்துக் குதறப்பட்ட 6 வயது பெண் குழந்தை, மருத்துவமனைகளின் அலட்சியத்தால் 5 மணி நேரமாக உயிருக்குப் போராடி இறந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Dhinasari Jothidam ad சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்கள்! மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த பரிதாபம்!

பின் தொடர்க

17,872FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...