
தெலங்காணா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பதிகள் ராஜ்பவனில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தெலங்காணா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜூன் 2ம் தேதி முதலில் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹாப்பி பர்த்டே விஷஸ் தெரிவித்த சிரஞ்சீவி செவ்வாயன்று மதியம் ராஜ்பவனில் தன் மனைவி சுரேகா வோடு சேர்ந்து ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தேச சேவையில் தாங்கள் இன்னும் பலப்பல பிறந்தநாட்களை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று முதலில் டுவீட் செய்தார் சிரஞ்சீவி. அதன்பின் செவ்வாய் அன்று மதியம் ஆளுநரை நேரில் சென்று சந்தித்தார்.
அண்மையில் சைரா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது ஆளுநரை சந்தித்து சைரா சினிமாவின் வரலாற்றை விவரித்து சினிமாவை பார்க்கும்படி கூறினார் சிரஞ்சீவி.
தெலங்காணா அவதார தினம், ஆளுநர் பிறந்த நாள் இரண்டுமே ஜூன் இரண்டாம் தேதி ஒரே நாளில் வந்ததால் தெலங்காணா முதல்வர் கேசிஆர் ராஜ்பவனில் கவர்னர் தம்பதிகளை மரியாதை பூர்வமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பாரத நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தெலங்காணா மக்கள் மிகநீண்ட அமைதியான போராட்டம் நடத்தி தனி மாநிலத்தை சாதித்துள்ளனர் என்று ஆளுநர் புகழாரம் சூட்டினார். தெலங்காணாவை வளமான ஆரோக்கியமான மாநிலமாக நிலை நிறுத்துவதில் நாம் வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிரஞ்சீவி, கேசிஆரோடு கூட பல அரசியல், சினிமா பிரமுகர்களும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.