
இந்தியாவில் உள்ள ஒரே ஒரு பாம்பு பூங்கா சென்னையில் உள்ளது. புதிதாக ஹைதராபாத்திலும் அதேபோன்ற பார்க் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தெலங்காணாவில் முதல் முறையாக பாம்புகளுக்கு தனி பார்க் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஹைதராபாதில் உள்ள பௌரம்பேட்ட ரிசர்வ் பாரஸ்ட்டில் ரூபாய் 1.40 கோடி செலவில் இதனை அமைத்துள்ளார்கள். பாம்புகளின் பாதுகாப்பு, புனர்வாழ்வு மையம் என்ற பெயரில் இதனை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
உலக சுற்றுச்சூழல் தினம் தொடர்பாக வனம், சுற்றுச்சூழல், அறநிலையத்துறை அமைச்சர் அல்லோல இந்திரகிரண் ரெட்டி இந்த பார்க்கை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.
பல்வேறுபட்ட உயிரினங்களை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, சென்னையில் கிண்டி ஸ்நேக் பார்க்குக்கு சமமாக பாம்புகளின் பாதுகாப்பு நிலையத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
மாநிலத்திலேயே முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள இந்த பாம்புகளின் புனர்வாழ்வு நிலையத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் ஸ்னேக் சொசைட்டி உதவியோடு மாநில அளவில் பிடித்த பாம்புகள் இதில் பாதுகாக்கப்படும். அதேபோல் பல்வேறு ரக பாம்புகளைப் பற்றி மக்களுக்கு புரிதல் ஏற்படுத்துவதற்கு கூட இது பயன்படும்.

யாராவது எங்காவது பாம்பைப் பார்த்தால் உடனே அதனை அடித்துக் கொல்லாமல் பிரெண்ஸ் ஆஃப் ஸ்னேக் சொசைட்டி ரெஸ்க்யூ டீமுக்கு செய்தி தெரிவித்தால் அவர்கள் உடனே நேராக சம்பவ இடத்திற்கு வந்து பாம்புகளை பிடித்து செல்வார்கள்.
இதுவரை இந்தியாவிலேயே உள்ள ஒரே ஒரு பாம்பு பார்க் சென்னையில் உள்ளது. சென்னையில் உள்ள கிண்டியில் இருக்கும் இந்த ஸ்னேக் பார்க்குக்கு உலகில் உள்ள மிகச்சிறந்த பாம்பு பார்க்களில் ஒன்றாக பெயர் உள்ளது. சென்னை செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் இதனை பார்த்து வருவார்கள்.
ஹைதராபாத்திலும் அதேபோன்ற பார்க் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.