பணியாளருக்கு கொரோனா; திருப்பதி கோவிந்தராஜர் கோவில் 2 நாட்கள் மூடல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Govindaraja Swamy temple tirupati
Govindaraja Swamy temple tirupati

திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவருக்கு கோவிட் -19 கொரோனா தொற்று குறித்த சோதனை யில் பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததை அடுத்து, கோயிலை உடனடியாக மூடுமாறு   திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டது 

இதையடுத்து கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கோயில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.  ஜூன் 14 நாளை கோயில் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது அதற்கு முன்னதாக கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடைபெற்றன 

ஸ்ரீ கோவிந்திராஜ சுவாமி கோவிலில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் புதன்கிழமை டிடிடி மத்திய மருத்துவமனைக்குச் சென்றதாக டிடிடி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனை ஊழியர்கள் அவரது மாதிரியை (தொண்டை துணியால்) சேகரித்து சோதனைக்கு அனுப்பினர். சோதனையில் அவருக்கு பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது  

அவர் உடனடியாக COVID-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் மற்றும் அவருடன் தொடர்பு கொண்ட எட்டு TTD ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.