chandrababu naidu meet
chandrababu naidu meet

குண்டூர் மருத்துவமனை எதிரில் நாரா சந்திரபாபு நாயுடு ஹை ட்ராமா.

நிபந்தனைகளின்படி ரிமாண்ட் கைதியை சந்திக்கக்கூடாது. கரோனா நேரத்தில் சந்திப்பதற்கு சாத்தியமே இல்லை. அனைத்தும் தெரிந்தாலும் மருத்துவமனை எதிரில் பரபரப்பை ஏற்படுத்திய நாரா சந்திரபாபு நாயுடு.

ஜூடிசியல் ரிமாண்டில் உள்ள கைதியை சந்திப்பது என்பது சாத்தியப்படாத ஒன்று. அது நிபந்தனைகளுக்கு விரோதமானது. இதை அறிந்தும் கூட எதிர்க் கட்சித் தலைவர் சந்திரபாபு ஹைதராபாத்தில் இருந்து குண்டூர் மருத்துவமனைக்குச் சென்று இஎஸ்ஐ ஸ்காமில் கைது செய்யப்பட்ட தெலுகு தேசம் கட்சித்தலைவர் அச்சந்நாயுடுவை சந்திப்பேன் என்று ஆர்ப்பாட்டம் செய்ததால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

நிபந்தனைகள், அரசாங்க மதிப்புகள்… என்று தினமும் பிறருக்கு உபதேசம் செய்யும் சந்திரபாபு தனக்கு மட்டும் அவை ஒன்றுமே கடைப்பிடிக்கத் தேவையில்லை என்ற ரீதியாக நடந்து கொண்டுள்ளார் என்று அந்த பார்ட்டி தலைவர்களே கூறுகிறார்கள்.

acchan naidu
acchan naidu அச்சந்நாயுடு

தம் கட்சித் தலைவரை சந்திப்பதற்கு அனுமதி தரவேண்டும் என்று சிறை துறை உயர் அதிகாரிகளையும் மருத்துவமனை சூப்பரின்டென்டையும் தெலுங்குதேசம் கட்சி அலுவலகம் கோரியது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதற்கு நிபந்தனைகள் சம்மதிக்காது என்றும் ரிமாண்ட் கைதியை சந்திக்கக்கூடாது என்றும் சிறைத்துறை தெளிவுபடுத்தியது. அனுமதி தம் எல்லைக்குட்பட்ட செயல் இல்லை என்றும் மாஜிஸ்ட்ரேட் அனுமதி தந்தால் சந்திக்கலாம் என்றும் மருத்துவமனை சூபரின்டென்டென்ட் கூட தெளிவுபடுத்தினார்.

ஆனாலும் சந்திரபாபு பிற தலைவர்களோடு சேர்ந்து அச்சந்நாயுடு உள்ள அறைக்கு செல்வேன் என்று போலீசாரைக் கேட்டதும் அவர்கள் அனுமதி இல்லை என்று கூறியதும் மருத்துவமனையை சூப்பரின்டென்டன்டை வெளியில் அழைத்து பேசியதும்… இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

அதன்பின் மருத்துவமனை வளாகத்திலேயே மீடியா கூட்டம் நடத்தினார் சந்திரபாபு நாயுடு.

ரிமாண்ட் கைதியை சந்திக்கக்கூடாதென்ற நிபந்தனை 40 ஆண்டு அனுபவம் உள்ளது என்று கூறிக்கொள்ளும் தெதே கட்சித் தலைவருக்கு தெரியாதா…? தெரிந்தால் எதற்காக அங்கிருந்து இங்கு வந்தார்? என்று சில மீடியா பிரதிநிதிகள் கேட்ட கேள்விக்கு தெலுகு தேசம் பார்ட்டி தலைவர்கள் சிறு புன்னகை செய்தார்கள்.

நிபந்தனைகளின்படி இது இயலாத காரியம் என்று தெரிந்தாலும் எதற்காக அனுமதி கேட்டார்? எதற்காக இல்லை என்று வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும்? நிபந்தனைகளை மீறி குழுக்களாக கட்சியைச் சேர்ந்த பிறரோடு மருத்துவமனைக்கு எதற்காக வருவது? இதெல்லாம் மீடியாவில் பிரச்சாரத்திற்காக செய்கிறார்கள் என்று தெலுங்குதேசம் கட்சி த் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே முணுமுணுக்கிறார்கள்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இது ஏதோ ஒரு பரபரப்பு செய்தி…. பிரச்சாரம் பெறுவதும் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதும் அடிக்கடி செய்து கொண்டே வருகிறார். இவ்வாறு பயணம் மேற்கொள்வது அவருக்கு வழக்கமாகி விட்டது என்பது தெளிவாகிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.

சந்திரபாபுவின் மகன் லோகேஷ் கூட வெள்ளிக்கிழமை இரவு அச்சந்நாயுடு கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றபோது அங்கு சென்று பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஒருபுறம் ஏசிபி கோர்ட் ஜட்ஜ் இருப்பிடத்திற்கு குற்றவாளியை அழைத்துச் செல்லும் வழியில் குற்றவாளியை சந்திப்பேன் என்று தலைவர்களோடு சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி… நகைப்புக்கு ஆளானார்.

ஜட்ஜின் இருப்பிடத்தில் குற்றவாளியை சந்திப்பதற்கு யாராவது முயற்சிப்பார்களா? அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியாதா? இவ்வாறு எதற்காகச் செய்கிறார்கள்? மீண்டும் மீடியா, பிரச்சாரம், யாரோ ஏதோ அவமதித்து விட்டார்கள் என்று அலறுவது, ஏதோ நடந்து விட்டது என்று மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது… இது அவர்களுக்கு வழிமுறை ஆகிவிட்டது.

சந்திரபாபு குண்டூரில் ஜெனரல் ஆஸ்பத்திரியில் நடத்திய டிராமா அனந்தபூரில் தொடர்வதற்கு லோகேஷ் மீண்டும் தயாராகிறார். ஞாயிற்றுக்கிழமையன்று அனந்தபூரில் கைது செய்யப்பட்ட ஜெசி பிரபாகர் ரெட்டியை சந்திப்பதற்கு தனக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending