ராஞ்சி தெருக்களில் ஹாய்யாக புல்லட் பைக் ஓட்டிய தோனி

dhony-bikeராஞ்சி: பைக் பிரியரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திர சிங் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியின் தெருக்களில் தன் ஆசை புல்லட்டில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வலம் வந்தார். பைக் பிரியரான தோனியிடம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புல்லட் பைக்குகள் உள்ளன. தற்போது ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும் 16 பைக்குகள் உள்ளனவாம். இவை தவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக சுற்றுவதற்காக, அந்த நகரங்களிலும் தலா இரண்டு பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தன்னிடம் விலையுயர்ந்த பல பைக்குகள் இருந்தாலும், முதல் முதலாக வாங்கிய புல்லட் பைக் மீதுதான் அவருக்கு ஆசை அதிகம். அதை அவ்வப்போது ஓட்டி மகிழ்வாராம். ஏப். 8 ஆம் தேதி முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணப்பட உள்ள தோனி அதற்கு முன் ஆசையாக தனது சொந்த ஊரில் புல்லட்டில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.