
ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதிக்குள் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.
குருகிராமின் பாலம் விஹார் பகுயில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
லட்சக்கணக்கில் பறந்து வந்து சில மணி நேரங்களில் ஏராளமான பயிா்களை சேதப்படுத்தும் இந்த வெட்டுக்கிளி தாக்குதலுக்கு குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தலைநகர் தில்லிக்கு அருகே குருகிராம் பகுதிக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பது, அண்டை மாநில மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.