vizhag gas leak
vizhag gas leak

எல்ஜி பாலிமர்ஸ் கேஸ் லீக்கேஜ் சம்பவத்தை மறப்பதற்கு முன்பே விசாகப்பட்டினத்தில் மற்றுமொரு விஷவாயு கசிதல் நேர்ந்துள்ளது.

பரவாடா ஃபார்மாசிடியில் உள்ள சாயினார் கெமிக்கல்சில் ரியாக்டரிலிருந்து விஷவாயு லீக் ஆனதால் இருவர் மரணமடைந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களை ஷிப்ட் இன்சார்ஜ் நரேந்திரா, கௌரிசங்கர் என்று அடையாளம் கண்டுள்ளனர். ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உடல் கோளாறுகளால் எல்வி சந்திரசேகர், பி. ஆனந்த் பாபு. டி ஜானகிராம், எம் சூரியநாராயண ஆகியோரை காஜுவாகவிலுள்ள ஆர்கே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

vizhag gas leak
vizhag gas leak

கலெக்டர் வினைசந்த், போலீஸ் கமிஷனர் ஆர்கே மீனா சம்பவ இடத்திற்கு வந்து உதவி நடவடிக்கைகளை மேற்பார்வை பார்த்து வருகின்றனர். ஹைட்ரஜன் சல்பைட் அதிக அளவில் ரியாக்டருக்கு வந்ததால் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் முதன்மைச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் வினய்சந்த் 4 அதிகாரிகள் கொண்ட கமிட்டியை ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

பரவாடா பார்மா சிட்டி விபத்து குறித்து கலெக்டரோடு ராஜ்யசபா அங்கத்தினர் விஜயசாயிரெட்டி உரையாடினார். விபத்துக்கான விவரங்களை கேட்டு அறிந்துகொண்டார். உடல் நிலை கோளாறுக்கு ஆளானவர்களுக்கு மேலான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending