கள்ளக்காதலி விலகுவது ஏன்? காரணம் கேட்க சென்ற காதலன்! ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையை கொன்ற கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ்
lovers 1

இளம் பெண் ஒருவர் தனது ஐந்து வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நன்றாகத்தான் இருந்து வந்துள்ளனர். ஆனால், சில நாட்களுக்கு பின்னர் தனது கள்ளக் காதலனை அந்தப் பெண் தவிர்க்க ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக காதலன் மிகுந்த சங்கடத்தை சந்திக்க நேர்ந்தது.

தன்னை ஏன் வெறுக்கிறார், ஏன் என்னிடமிருந்து விலகி செல்கிறாள் என்று புரியாமல் மிகுந்த மனவருத்தத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில், தனியே யோசித்துக்கொண்டிருந்த கள்ள காதலன், காதலியின் வீட்டிற்கு சென்று காரணத்தை கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டு காதலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது, அங்கே வேறொரு நபருடன் தனது கள்ளக்காதலி உல்லாசமாக இருப்பதை கண்ட முன்னாள் கள்ளக்காதலன் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார். மேலும், அந்த பெண்ணுடன் இருந்த நபர் இவரின் நண்பன் என்று கூறப்படுகிறது. ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பெண்ணின் ஐந்து வயது சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கின்றார். அவர்கள் இருவரையும் கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் ஏமாற்றம் தாங்க முடியாமல் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இதற்குள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.