ஆமதாபாத் எப்போது பாரம்பரிய நகராகும் தெரியுமா?: சு.சுவாமி பதில்!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன்

subramaniam swamy

யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. பாரீஸ், வியன்னா, பிரேசல்ஸ், ரோம், எடின்பர்க் ஆகிய புகழ்பெற்ற நகரங்கள் அடங்கிய புராதன நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத்தும் இணைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமதாபாத் நகரம், சுல்தான் அகமது ஷா என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, எப்போது அகமதாபாத்துக்கு கர்ணாவதி என்ற அதன் பழைமையான பெயரைச் சூட்டுகிறோமோ அப்போதுதான், அதற்கு பாரம்பரிய நகர் எனும் பெயர் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  எல்லைக்கு உள்ளும் புறமும்... பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.