man

பண விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவில், 30 வயது ஊழியரை, அவரது கம்பெனி ஓனரே கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைத்ததுடன், அந்த ஊழியரின் ஆணுறுப்பில் சானிடைசரை தெளித்து சித்ரவதையும் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுவதாவது: “கடந்த ஜுன் 13, 14 ஆகிய தேதிகளில் நிறுவனத்தின் ஆபீசிலேயே இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.. இந்த புகார் குறித்த கடந்த 2ம்தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர்களின் ஓவியங்களின் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனம் கோத்ரூட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு மேனேஜராக வேலை பார்த்தவர்தான் 30 வயது இளைஞர். கடந்த மார்ச் மாதம் பணிநிமித்தமாக மேனேஜர் தில்லிக்கு சென்றிருக்கிறார். ஆனால் லாக்டவுன் போடப்படவும், அங்கு சிக்கிக்கொண்டார். இதனால் தில்லியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வேண்டிய சூழல் மேனேஜருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே 7-ம் தேதி புனேவுக்கு திரும்பி வந்துள்ளார். வெளியூரில் இருந்து வந்ததால், 17 நாட்களுக்கு ஒரு ஹோட்டலில் அவரை தனிமையில் இருக்கும்படி அவரது கம்பெனி ஓனர் சொல்லியிருக்கிறார். மேனேஜர் கையில் காசு இல்லாததால் மேனேஜர் தன்னுடைய செல்போன், டெபிட்கார்டை அடமானம் வைத்துள்ளார்.

இதனிடையே, கடந்த 13-ம் தேதி, கம்பெனி ஓனரும், அவரது பிஏவும் செலவழித்த பணம் எங்கே என்று கேட்டு மேனேஜரை கடத்தியுள்ளனர். ஒரு மூட்டையில் ஊழியரை கட்டி, காரில் போட்டு கொண்டு, ஒரு இடத்தில் அடைத்து வைத்து தாக்கி உள்ளனர். மேலும் ஊழியரின் ஆணுறுப்பில் சானிடைசரையும் தெளித்து சித்ரதை செய்துள்ளனர்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

இப்போது பாதிக்கப்பட்டவரை மீட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending