இன்னா மிக்ஸிங்..!? சான்ஸே இல்ல..! சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு! #HappyBirthdayDhoni

Published:

msd birthday
msd birthday

தனது சிகை அலங்காரத்தை போலவே வித்தியாசமான முறையில் பேட்டிங் திறமையால் இந்திய அணியை வேறொரு உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் 39வது பிறந்த தினம் ஜூலை 7ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது. 

தோனியின் பிறந்த நாளான இன்று, தோனிக்கு சக கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் ரசிகர்கள் என பல தரப்பினரும் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்வகையில், மும்பை போலீஸ் வித்தியாசமாக கொரோனா கால விழிப்புணர்வு செய்தியுடன் தோனியின் பிறந்த தின வாழ்த்தை தெரிவித்துள்ளது 

மகேந்திர சிங் தோனி என்ற பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்களான MSD என்பதை மெய்ன்டெய்ன் சோஷியல் டிஸ்டன்சிங் (Maintain Social Disatancing) என்பதாக மாற்றி டூ இட் த மாஹி (தோனி) வே, ஸ்டே நாட் அவுட், ஸ்டே கூல் & ஸ்டம்ப் கரோனா வைரஸ், ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் என்று சுவாரசியமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

தோனியின் ரசிகர்கள் பலரும் அவரது கிரிக்கெட் சார்பில் நடந்த மெய்சிலிர்க்கும்  ஆட்ட வீடியோக்கள் என கோத்து வெளியிட்டு வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர் ரஜினியின் பாடலை போட்டு தோனியின் அட்டகாசமான சிறப்பான காட்சிகளைத் தொகுத்து வீடியோ ஆக்கியுள்ளார் இது பலராலும் ரசிக்கப்பட்டு இது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் …

Related articles

Recent articles

spot_img