வடசென்னையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
வடசென்னை பகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதி நகரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித் தொகைகள் வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்ற மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட தலைவர் சந்தானம் தெரிவித்தார்.



