பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
1953ஆம் ஆண்டு முதல் யு.ஜி.சி என்னும் பல்லைக்கழக மானியக்குழு இயங்கி வருகிறது. உயர் கல்வியை ஒழுங்குப்படுத்துதல், தகுதியான கல்லூரிகளுக்கு நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. நிதியுதவி திட்டங்களையும் பல்கலைக்கழக மானிய குழுவே கையாண்டு வருவதால் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதற்கான வரைவு மசோதா வருகின்றன நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.



