ஜோதிராத்யா சிந்தியா, சச்சின் பைலட் வரிசையில்… கார்த்தி சிதம்பரம்! ராகுலை தவிர்க்கும் காங்கிரஸ் இளம் தலைமுறை!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
karthik 1
karthik 1

காங்கிரஸ் இளைய தலைமுறையினர் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க மறுக்கின்றனர் அல்லது தவிர்க்கவே விரும்புகின்றனர் என்பது தமிழகத்தின் கார்த்தி சிதம்பரம் மூலம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது

 ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்த இந்த மௌனப் புரட்சி அங்கிருந்து ராஜஸ்தானுக்கு பரவியது இப்போது தமிழகத்தின் கார்த்தி சிதம்பரமும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே கட்சியின் நிலையை விமர்சித்துள்ளார்

 காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையை அவ்வளவாக இளைய தலைமுறையினர் எவரும்  விரும்பவில்லை என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் அக்கட்சியின் இளம் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதம் வெளிக்காட்டுகிறது 

மத்திய பிரதேசத்தில் இளம் தலைவராக உருவெடுத்த ஜோதிராதித்யா சிந்தியா மூத்த தலைவர்களால் புறக்கணிக்கப் பட்டு, ஓரம் கட்டப் பட்டதில் அவர் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியுள்ளார். தற்போது அதே போன்ற நிலைமை ராஜஸ்தானிலும் நடைபெற்றுள்ளது இதற்கு காங்கிரஸ் கட்சியில் இணைய தலைவர்களையும் திறமைகளையும் மதிப்பதில்லை அல்லது ஊக்கம் கொடுப்பதில்லை என்ற மனக்குறையே காரணம் !

இதைத்தான் கார்த்தி சிதம்பரமும் தமது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளர். 

கூகுள் ஏன் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக திகழ்கிறது? ஏனென்றால், அந்த நிறுவனத்துக்குள்ளே தொழில்முனைப்புத் திறமையுள்ள திறனாளர்களை தூக்கிவிடுவதுதான். இங்கே கற்க வேண்டிய பாடம் அது – என்று குறிப்பிட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். 

 முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பும் இல்லை , மரியாதையும் இல்லை என சச்சின் பைலட் விவகாரம் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து தெரிவித்திருந்தார். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், பாஜக.வில் இன்று இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சச்சின் பைலட் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவருமான ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது…

ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டார். என்னைப்போல எனது நண்பர் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.