கொரோனா மருந்து என மதுவை கொடுத்து சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல்! சாமியார் கைது!

இந்தியா கிரைம் நியூஸ்
samiyar

உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சுக்ரட்டல் ஆசிரமம் உள்ளது . இந்த ஆசிரமத்தை சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

அவருடைய ஆசிரமத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், பல கொடுமைகளை அனுபவிப்பதாக மர்ம நபர் ஒருவர் போனில் குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து கோடியா மத் ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களை ஆசிரமத்திலிருந்து மீட்டனர். சிறுவர்களை பரிசோதனை செய்த போது, அவர்களில் 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.

விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட சாமியார், சிறுவர்களுக்கு கொரோனா மருந்து என்ற பெயரில் வலுகட்டாயமாக மதுபானத்தை கொடுத்துள்ளார்.

அவர்கள் போதையில் இருக்கும் போது, ஆபாச படங்களை வற்புறுத்தி பார்க்கவைத்துள்ளார். பின்னர், அவர்களை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடுமைபடுத்தியுள்ளார்.

அந்த சாமியார், கொரோனா தடுப்பு மருந்து என்று கூறி மதுவை வலுக்கட்டாயமாக கொடுத்து, ஆபாச வீடியோக்களை பார்க்கச்சொல்லி பாலியல் சீண்டலுக்கு உட்படுத்துவார் எனவும் அவர் கூறுவதை செய்யாவிட்டால் கடுமையாக அடிப்பார் எனவும் அந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுவர்களை நிர்வாணமாக்கி படுக்கவைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் அந்த சாமியார். சிறுவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரமம் நடத்திய சாமியார் மற்றும் அங்கு பணிபுரியும் சமையல்காரர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து சாமியாரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.