உருதும் அரபும் கற்க சென்ற 15 வயது சிறுமி! ஆசிரியரால் மிரட்டி மிரட்டி 4 வருடம் தொடர் பாலியல் வன்கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் நகராத்னா பகுதியை சேர்ந்தவர் 19 வயதான பெண் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் தனக்கு மதராசாவில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக தன்னை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்த விஷயத்தை கணவருக்கு தெரிவித்துள்ளார்.

கணவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த நகாத்ரானா தாலுகாவின் கீழ் உள்ள நாரா காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கு 15 வயதாக இருக்கும்போது உருது மற்றும் அரபு மொழியைக் கற்க மதரசாவுக்கு அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்தார்.

2015’ஆம் ஆண்டில் ஒரு நாள், மௌலானா சாம்சுதீன் ஹாஜி சுலைமான், தனது துணி துவைப்பதற்காக என்னிடம் கொடுத்தார். அடுத்து வகுப்புகள் முடிந்ததும் குளித்துவிட்டு போகும்படி என்னை குளியலறைக்குள் அனுப்பினார் மௌலானா.

உள்ளே சென்றவுடன் உடனடியாக பின்னால் இருந்து வந்து தன்னை குளியலறைக்குள் பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் இந்த சம்பவம் குறித்து எதையும் வெளியிட்டால் தன்னைப்பற்றி தவறாக பரப்புவதாக அவர் என்னை மிரட்டினார்” என்றும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள நௌபாஸ்தா பகுதியில் தனது வகுப்பில் படித்த சிறு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு மதரசா ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.