ஹைதராபாத் கலெக்டருக்கு கொரோனா பாசிட்டிவ்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hyderabad-collector-swetha-mahanthi1-1
hyderabad-collector-swetha-mahanthi1-1

ஹைதராபாத் நகரத்தில் கொரோனா கேசுகளின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது.

நகரத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் சீனியர் அதிகாரிகளும் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் கலெக்டர் ஸ்வேதா மஹந்தி கூட கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தெலங்காணாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. டெஸ்டுகள் பெருகிவரும் வேகத்தில் பாசிட்டிவ் கேசுகளும் கூட பெருகுகின்றன.

கொரோனா கட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் எத்தனை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டாலும் வைரஸின் பரவுதலுக்கு மட்டும் அணைக்கட்டு விழவில்லை.

மாநிலத்தில் பல எம்எல்ஏக்கள் அரசியல் தலைவர்கள் உயரதிகாரிகள் கொரோனா வலையில் விழுந்து உள்ளார்கள்.

புதிதாக ஹைதராபாத் கலெக்டர் ஸ்வேதா மஹந்திக்கு கூட கொரோனா பாசிடிவ் என்று செய்தி. ஆனால் இந்த விஷயத்தை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.

அவருடைய டிரைவருக்கும் கலெக்டர் ஆபீசில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கும் கூட கொரோனா பாசிட்டிவாக உள்ளது.

இதுவரை ஹைதராபாத் கலெக்டர் அலுவலகத்தில் மொத்தம் 15 பேர் ஊழியர்கள் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது .

ALSO READ:  திமாகி நக்சல்கள் - யார் என்று சொல்லவும் வேண்டுமோ?
hyderabad-collector-swetha-mahanthi-1
hyderabad-collector-swetha-mahanthi-1

கடந்த சில நாட்களாக கலெக்டர் சுவேதா அலுவலகத்துக்கு வரவில்லை என்பது தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்காணாவில் 1676 பாசிடிவ் கேசுக்கள் பதிவாகியுள்ளன. ஜிஹெச்எம்சி எல்லையில் 788 கேசுகள் பதிவாகியுள்ளன.

ரங்காரெட்டி மாவட்டத்தில் 224, மேட்சலில் 160, கரீம் நகரில் 92, நல்கொண்டாவில் 64, சங்காரெட்டியில் 57, நாகர்கர்நூல் 30, மெதக் மாவட்டத்தில் 26 புது கேசுகள் பதிவாகியுள்ளன..

ஆந்திராவிலும் கோவிட் கேசுகள் மிக அதிக அளவில் பெருகி வருகின்றன.விசாகா கலெக்டரேட்டில் 22 பேர் ஊழியர்களுக்கு கோவிட் பாசிடிவ் வந்துள்ளது. அண்மைக்காலத்தில் விசாகா கலெக்டரேட்டில் 300 பேர் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.