முன் பகை.. யாருமில்லா நேரம் வந்து பெண்ணிடம் அத்துமீறல்! சமயத்தில் வந்த கொழுந்தன்.. !

இந்தியா கிரைம் நியூஸ்
women

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முன்னா. இவர் மனைவி தேவி. இந்த நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தார். முன்னா குடும்பத்திற்கும், சோட்டு என்பவரின் குடும்பத்திற்கும் முன் பகை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சோட்டு மற்றும் அர்விந்த் என்ற இருவர் திடீரென முன்னவின் வீட்டிற்குள் புகுந்து தேவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர். அந்த சமயத்தில் தேவியின் கொழுந்தன் ராமன் மற்றும் மகன் குமார் ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் தேவியிடம் இருவரும் தவறாக நடக்க முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இருவரும் சேர்ந்து அர்விந்த் மற்றும் சோட்டுவுடன் சண்டை போட்டு தேவியை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது தேவியின் கொழுந்தன் ராமன் மற்றும் மகன் குமார் இருவரின் தலையில் இரும்பு கம்பியை கொண்டு தாக்கினார்கள், அந்த சமயத்திலும் தனது அண்ணியை காப்பாற்ற ராமன் தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடியுள்ளார். ஒருகட்டத்தில் அர்விந்த் மற்றும் சோட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

பின்னர் காயமடைந்த ராமன் மற்றும் குமாரை தேவி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.