
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இதை அடுத்து அவரது அலுவலக டிவிட்டர் கணக்கும் இன்று முதல் அவர் புகைப்படத்துடன் மாறியது.
முன்னதாக, பிரசிடெண்ட் முகர்ஜி என்று பெயரிட்டு, பிஓஐ13 @POI13 என்ற பெயருடைய டிவிட்டர் கணக்குக்கு முந்தைய குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரையிலான அனைத்து டிவிட்டர் செய்திகளும் தொகுக்கப்பட்டு தனி கணக்காக மாற்றப்பட்டது. அதனை தற்போதைய ராஷ்ட்ரபதி பின் தொடர்கிறார்.
தற்போது, பிரசிடெண்ட் ஆஃப் இந்தியா என்ற ராஷ்ட்ரபதி பவன் டிவிட்டரை @rashtrapatibhvn ராம்நாத் கோவிந்த்தின் அலுவலக செயலர் கையாள்கிறார் என்றும், ராம்நாத் கோவிந்தின் அதிகாரபூர்வ டிவிட்கள் பிரசிடெண்ட் கோவிந்த் #PresidentKovind என்று வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.



