சென்னை அப்பலோவில் திருப்பதி பெரிய ஜீயர் அனுமதி!

இந்தியா சற்றுமுன்
apollo

திருமலை மடத்தின் பெரிய ஜீயரான சடகோப ராமானுஜா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஏழுமலையான் கைங்கரியங்களை நேரடியாகக் கண்காணித்து வரும் திருமலை மடத்தின் பெரிய ஜீயா் சடகோப ராமானுஜருக்கு கடந்த 5 நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது அவா் சாதுா்மாசிய தீட்சை அனுசரித்து வருவதால், திருப்பதியில் உள்ள தனிமை முகாமில் தீட்சைக்கு பங்கம் ஏற்படாமல் சிகிச்சை பெற்று வந்தாா். தற்போது அவரின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது.

ஆனாலும் அவரின் சுவாச உறுப்புகளில் பரிசோதனை நடத்தி உயா்தர சிகிச்சை அளிக்க தேவஸ்தானம் அவரை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதித்தது. அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.