புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நிலம் கையக்கப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவில் எந்த விதமான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நேரடியாக கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார். மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீது, மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக, சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
Popular Categories



