புது தில்லி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கப்பட்டது. இதில் 9அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். 4 பேர் கேபினட் அந்தஸ்து பெற்றனர். அவர்களில், இன்று புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றவர் அல்போன்ஸ் கன்னம் தானம். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அல்போன்ஸ் கண்ணம் தானம் இன்று முற்பகல், மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் அவர் தனது மனைவியுடன் மதிய உணவு அருந்தினார்.
அப்போது அவரது மனைவி ஷீலா அல்போன்ஸ், அவருக்கு பாயஸத்தை வாயில் ஊற்றிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.



