காணாமல் போன கொரோனா நோயாளி… தேடியதில் வெளிப்பட்ட பகீர் ‘நிர்வாக கோளாறுகள்’!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
covid19 ambulance - 2026
  • திருப்பதியில் கொரோனா நோயாளி மிஸ்ஸிங்.
  • அதிகாரிகளிடம் டென்ஷன்.
  • கடைசியில் பார்த்தால் ஒரு டிவிஸ்ட்.

இரண்டு மூன்று நாட்கள் வரை குடும்ப அங்கத்தினர்களோடு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் குடும்ப அங்கத்தினர்களுக்கு சந்தேகம் வந்தது. திருப்பதியில் பரபரப்பு.

திருப்பதி ருயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பேஷண்ட் மிஸ்ஸிங் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெதுருகுப்பம் மண்டலத்தைச் சேர்ந்தவருக்கு இருமல் மூச்சிரைப்பு இருந்ததால் திருப்பதி ருயா மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

கோவிட் அடையாளங்கள் இருந்ததால் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் வந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் வரை குடும்பத்தினர்களோடு மொபைல் போனில் பேசி வந்தார்.

ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் குடும்ப அங்கத்தினர்களுக்கு சந்தேகம் வந்தது. செவ்வாயன்று காலை அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையிலிருந்து செய்தி வந்தது.

மனைவியும் குழந்தைகளும் இறுதிப் பார்வைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். கோவிந்த தாமத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் முகம் காண்பிப்போம் என்றும் மார்ச்சுவரி அருகிலேயே இருக்கும்படியும் மருத்துவமனையில் கூறினார்கள்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

காலையிலிருந்து மாலை வரை சடலத்தை எடுத்து வரவில்லை. காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போன குடும்பத்தினர் இறுதியில் மருத்துவமனை உள்ளே சென்றார்கள். அங்கே நோய் தாக்கப்பட்ட வருடைய சடலம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

இந்த செய்தியை நோடல் ஆபீசர் பார்வைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர் ஊழியர்களோடு சேர்ந்து மார்ச்சுவரி முழுவதும் தேடியும் இறந்த உடல் கிடைக்கவில்லை என்பதை கண்டறிந்தார்.

அதன்பின் கோவிட் மருத்துவமனைக்கு சென்று அங்கும் தேடினார்கள். ஆனால் என்ன நடந்தது என்று விசாரித்தபோது மருத்துவமனையில் அவருடைய பக்கத்து படுக்கையில் இருந்த ஒரு நோயாளி இறந்து போன போது அந்த விவரங்களை இவருடைய கேஸ்ஷீட்டில் எழுதி விட்டுதாக தெரிகிறது.

இறந்துபோன அந்த நபருடைய சடலம் மார்ச்சுவரியில் உள்ளது. ஆனால் 49 வயதுடைய இந்த நோயாளி என்ன ஆனார் என்பது மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தேடியும் தெரியவில்லை. அவருடைய பெட் அருகிலேயே மொபைல் சார்ஜர் மற்றும் பை உள்ளது.

திங்கட்கிழமை காலை மருத்துவமனைக்கு வெளியில் நின்று இருந்ததாக அங்கிருந்து சிப்பந்தி ஒருவர் கூறினார் அவருடைய விவரங்களுக்காக தேடி வருகிறார்கள்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.