பூமி பூஜை போட்டாச்சி… பாட்டி இனி நீ சாப்பிடலாம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
urmila chaturvedi - 2026

அயோத்தியில் இன்று ராம ஜன்ம பூமியில் புதிய ராமர் ஆலயம் அமைவதற்கான பூமி பூஜை இனிதே நடைபெற்றது. ஆனால், ராமர் கோயிலுக்காக சாப்பாட்டை நிறுத்தி வைத்திருந்தார் ஒரு மூதாட்டி. அவர் இனி சாப்பிடலாம் என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்.

ஜபல்பூரைச் சேர்ந்த இந்த முதியவர் பெயர் ஊர்மிளா சதுர்வேதி. வயது 82. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் வசித்து வருகிறார். 1992ல் அயோத்தியில் கலவரங்கள் ஏற்பட்டபோது ராம மந்திர் கட்டும் வரை உணவு உண்ண மாட்டேன் என்று முடிவு எடுத்தார்.

அப்போதில் இருந்து இப்போது வரை பழங்களை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ராமாயணம் படித்தும் பிரார்த்தனை செய்தும் காலம் கடத்தி வந்தார்.

urmila chaturvedi1 - 2026

இன்று வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறியது. பிரதமர் நரேந்திர மோடி யின் கரங்களால் அயோத்தி ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் வெற்றிகரமாக நடந்தேறியது.

இப்போது அவருடைய உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் அவரை உணவு உண்ணும்படி மகிழ்ச்சியாக கூறி வருகிறார்கள்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.