பாலியல் வன்கொடுமை: அந்தரங்க இடங்களிலெல்லாம் பலத்த காயம்! உயிருக்குப் போராடும் 12 வயது சிறுமி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Screenshot_2020_0807_193820

தில்லியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து உடலில் பல காயங்கள் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியின் பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் நேற்று (06.08.2020) வியாழக்கிழமை மாலை வீட்டில் இருந்த 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் குற்றவாளியை தடுத்த காரணத்தால் சிறுமியை கத்தரிக்கோலால் பல முறை குத்தியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புது தில்லி காவல்துறையினர் சிறுமியின் வீடு அமைந்திருந்த சுற்றுவட்டாரங்களில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து, சுமார் 100-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அவரின் குற்றப் பின்னணியை ஆராய்ந்ததில், குற்றவாளி போதைக்கு அடிமையானவர் என்றும், இதற்குமுன் மற்ற கிரிமினல் வழக்குகளில் சிறைக்கு சென்று சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அந்த நேரத்தில் குடிபோதையில் இருந்ததாகவும், திருட்டு நோக்கத்துடன் தான் முதலில் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி மயக்கமடையும் வரை தாக்குதல் நடத்தியவருடன் சண்டையிட்டதால், பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் மர்ம பாகங்கள் மற்றும் குடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுமியின் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மைனர் சிறுமி இப்போது புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) உயிருக்கு போராடி வருகிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.