6 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்! தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot 2020 0807 194852 - 2026

சென்னையில் உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 6 வயது உள்ள மகள் மற்றும் தாய் இருக்கிறார்கள். அந்த தாய்க்கு ஒரு கள்ளக்காதல் இருந்துள்ளது. சம்பவத்தன்று சிறுமி தனது இல்லத்தில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியை சார்ந்த பிரபாகரன் (வயது 40) என்பவன், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதனால் பதறிப்போன சிறுமி, அலறவே, சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் சிறுமியின் தாயார் விரைந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், திருவான்மியூர் பகுதியில் இருந்த பிரபாகரனை அடித்து நொறுக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காமுகன் பிரபாகரன் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர்.

இவருக்கும், சிறுமியின் தாயாருக்கும் கடந்த 3 வருடத்திற்கும் மேலாக திருமணம் கடந்த உறவு இருந்தது என்றும், இதனால் தனது கள்ளக்காதலியை சந்திக்க வந்த நேரத்தில், சிறுமியின் மீது காம பார்வை இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.