
விலங்குகளின் வீடியோக்கள் (Animal Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
ஒரு கோழிக்கும், மிகவும் ஆபத்தான பறவையாக கருதப்படும் பருந்துக்கும் இடையே நடக்கும் சண்டையைக் காண முடிகின்றது.
இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில், கோழி (Hen) ஒன்று தனது குஞ்சுகளுடன் திறந்தவெளியில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. இந்த கோழியையும் அதன் குஞ்சுகளையும் எளிதான இரையாகக் கருதிய பருந்து ஒன்று அங்கு செல்கிறது.
பருந்து அங்கு வந்தவுடன் கோழி பயந்து ஓடுவதையும் காண முடிகின்றது. ஆனால் அடுத்த நொடியே தன் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த கோழி, கண் இமைக்கும் நேரத்தில் பருந்துக்கு முன் வந்து நிற்கிறது.
இதற்குப் பிறகு, வீடியோவில் (Viral Video) நாம் பார்க்கும் காட்சிகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
கோழி, தன்னைப் பற்றி கவலைப்படாமல், உடனடியாக அசாத்திய தைரியத்துடன் பருந்தைத் தாக்கியது. தனது நகங்கள் மற்றும் அலகால் பருந்தை தாக்குகிறது.
தன் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் கோழியிடம் வலுவாக உள்ளது. அந்த எண்ணத்தின் வலிமையால் மிகவும் ஆபத்தான பறவையும் பின் வாங்க வேண்டியதாயிற்று.
இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனுடன், குதிரையின் சக்தியை விட தாயின் சக்தி அதிகம் என்று எழுதியுள்ளார்.