மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் பொன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் முதன்மை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் கற்பித்தலை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை சிறப்பு விருந்தினர் ஸ்மார்ட் ஸ்கூல் சொலுஷனின் (Smartschool Solution) மதுரை மண்டல மேலாளர் ராஜ்குமார் செய்முறையாக விளக்கி உரையாற்றினார். ஆசிரியர்கள் நேரடியாக பயிற்சியினை எடுத்துக் கொண்டனர்.
பயிற்சியின் போது, ஏற்பட்ட தங்களின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தலில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்கள் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டனர். கணினி துறைத் தலைவர் பாலாஜி நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை, கணிதத் துறை பேராசிரியர் முனைவர் கலைவாணன் தொகுத்து வழங்கினார்.