பாலில் மயக்க மருந்து கொடுத்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை! அனாதை இல்லத்தில் நடந்த அநீதி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai 1 1

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா என்ற பெண் நிர்வகித்து வருகிறார் .அங்கு ஒரு 14 வயது சிறுமியை அடைத்து வைத்து ஓர் ஆண்டாக அந்த அனாதை இல்லத்தின் நன்கொடையாளர் வேணுகோபால் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .

அந்த சிறுமியை தன்னுடைய மாமா வீட்டில், வறுமையின் காரணமாக அவரின் பெற்றோரால் கொண்டு வந்து விடப்பட்டார் .பிறகு அவரின் மாமாவால் அந்த சிறுமி சென்ற ஆண்டு இந்த அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார் .அங்கு போக மறுத்த சிறுமியை சிறுமியின் மாமா அடித்து துன்புறுத்தப்பட்டு சேர்க்கப்பட்டார் .

அவர் அங்கு சேர்ந்த நாள் முதல் அங்கு அடிக்கடி வந்து செல்லும் வேணுகோபால் என்ற நன்கொடையாளர் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்துள்ளார் .அதை குடித்து மயங்கிய அந்த சிறுமியை அவர் கடந்த ஓராண்டாக இப்படியே பலாத்காரம் செய்துள்ளார் . இது போல அங்கு பல பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்களாம்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

இந்த விஷயத்தை அந்த ஹாஸ்டெல் வார்டனிடம் கூறியபோது அவர் மேலும் அவரால் கொடுமை படுத்தப்பட்டு ,பலாத்காரம் செய்யப்பட்டார் .இதனால் அந்த பெண் அங்கிருந்து தப்பி , தன்னுடைய அத்தை வீட்டிற்கு வந்தார் .பிறகு அவரின் அத்தையிடம் நடந்த விஷயத்தை கூறியதும் அவர்கள் போலீசில் அந்த ஹாஸ்டெல் வார்டன் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது பலாத்கார புகார் தந்தனர்.

புகாரை பெற்ற போலீசார் விசாரணை செய்து அந்த ஹாஸ்டெல் வார்டன் விஜயா அவரின் தம்பி ,மற்றும் அதன் உரிமையாளர் வேணுகோபால் ஆகியோரை கைது செய்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.