மீன் நறுக்கிக் கொண்டிருந்த மனைவியுடன் சண்டையிட்ட கணவன்.. ஆத்திரத்தில் அந்த இடத்தை அறுத்த கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Screenshot_2020_0818_154034

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் 45 வயது நபர் மல்லிக் தன்னுடைய 40 வயது மனைவி மணிரா வுடனும் , இரண்டு மகன்களுடனும் வசித்து வந்தார் .இருவருக்கும் சண்டை வருவதும் ,பிறகு சமாதானமாக போவதும் அடிக்கடி நடப்பது வழக்கமாம் .

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வழக்கம் போல புருஷன் பொண்டாட்டிக்குள் சண்டை வந்தது .அப்போது அந்த மனைவி மீன் வெட்டிக்கொண்டிருந்தார் .அப்போது அவரிடம் சண்டை போட்ட கணவனை கோபத்தில் அவரின் மனைவி ,அந்த மீன் வெட்டும் கத்தியால் அவரின் மர்மஉறுப்பை வெட்டி வீசி தள்ளினார் .

பிறகு அவரின் தலையில் அந்த கத்தியால் பலமுறை பலமாக தாக்கினார் .இதனால் ரத்த வெள்ளத்தில் அவரின் கணவன் அந்த இடத்திலேயே துடிதுடித்து கிடந்தார் .அதை பொருட்படுத்தாத மனைவி வீட்டு வேலை பார்க்க சென்றுவிட்டார்

மறுநாள் வரை புருஷன் அந்த அறையை விட்டு வெளியே வராததால் , அந்த மனைவி தன்னுடைய பிள்ளையிடம் உங்கப்பா என்ன செய்கிறார் என்று போய் பார் என்று கூறியுள்ளார் ,

அவரின் மகன் அந்த அறைக்கு சென்று பார்த்த போது, தன்னுடைய தந்தை ரத்தவெள்ளத்தில் கிடப்பது கண்ட மகன் அலறினார் .அந்த அவரின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவரின் தந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர் .இதனால் கணவனை கொன்ற அந்த மனைவி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.