கோவிலுக்கு சென்ற மூதாட்டி! கடத்தி.. இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai 1 1

உத்திரபிரதேச மாநிலம் சித்தார்த் மாவட்டத்தில் சோரட்கர் பகுதியை சேர்ந்த ஒரு 60 வயது பெண்மணி சனிக்கிழமை இரவு கோவிலுக்கு போய்க்கொண்டிருந்தார் .

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பார்லிகன் மற்றும் ராமு என்ற இரு இளைஞர்களும் குடித்து விட்டு அந்த வழியாக வந்தனர் .

அந்த இருவரும் அந்த பெண்மணியிடம் கையை பிடித்து இழுத்து வம்பு செய்தனர் .அப்போது அந்த பெண்மணி கத்தியதும் ,உடனே அந்த இருவரும் அந்த 60 வயது மூதாட்டியை அந்த பகுதியில் உள்ள ஒரு தனிமையான இடத்திற்கு வாயில் துணியை வைத்து அழுத்தி தூக்கி சென்றனர் .அப்போது அந்த பெண்மணி மயக்கமடைந்து கீழே சாய்ந்தார் .உடனே அந்த இருவரும் மயக்கநிலையில் இருக்கும் அந்த பெண்மணியை மாறி , மாறி பலாத்காரம் செய்தனர் .

உடனே அந்த பெண்மணி கோமா நிலைக்கு சென்றுள்ளார் .அப்போது அந்த மூதாட்டிக மயக்கமுற்று இருப்பதை பார்த்த அவர்கள் அங்கேயே விட்டு விட்டு அப்படியே ஓடி விட்டார்கள் .

பிறகு அங்கிருந்தவர்கள் அந்த பெண்மணியை ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .ஆனால் அந்த மூதாட்டி இரண்டு நாள் கழித்து திங்கள்கிழமைதான் கண் விழித்து பார்த்தார் .அப்போது போலிசார் மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது, தான் கோவிலுக்கு அன்று இரவு சென்று கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் குடித்து விட்டு வந்து தன்னை ஒரு மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்தார்கள் என்று வாக்குமூலம் கொடுத்தார் .

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

உடனே போலிசார் வழக்கு பதிந்து,பலாத்காரம் செய்த அந்த இருவரையும் கைது செய்தனர் .இப்போது அந்த பெண்மணி இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.