தனிமைப்படுத்துதல், இ-பாஸ், கொரோனா பரிசோதனை எதுவும் தேவையில்லை! அரசு எடுத்த அதிரடி முடிவு!

இந்தியா சற்றுமுன்
trafic 1

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதில் ஒரு வழிமுறையாக இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

இதில், கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனினும், மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று போக்குவரத்து பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் உள்ளேயும், மாநிலத்தைவிட்டு வெளியே செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகா வருவோருக்கு, மாநில எல்லைகளில் நடத்தப்பட்டு வந்த மருத்துவ பரிசோதனைகள் இனி அவசியம் இல்லை என்றும், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.

குறிப்பாக, பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் தேவையில்லை என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.