ஒரு ஓவரில் 5 சிக்ஸர்! அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்!

இந்தியா லைஃப் ஸ்டைல் விளையாட்டு
rajastan-team
राहुल तेवतिया – ராஹுல் தேவதியா rajastan-team

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 13வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின.

இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்று பந்து வீசத் தீர்மானித்தார் ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்! பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (106), கேப்டன் லோகேஷ் ராகுல் (69) ஆகியோர் நன்கு விளையாட, அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (85), ஸ்டீவ் ஸ்மித் (50), ராகுல் தேவதியா (53) ஆகியோர் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல்., போட்டியில் அதிக ரன் சேஸ் செய்து வென்ற அணியாக புதிய சாதனை படைத்தது.

rahul-yuvi
rahul-yuvi

இதனிடையே, இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ராஹுல் தேவதியா ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்தார். அவரது சாதனைக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்காக நன்றி என்றும் நக்கலுடன் குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஒரு பந்தை சிக்சருக்கு பறக்க விடாமல் விட்ட ராகுல் தேவதியாவுக்கு நன்றி. சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில், ஸ்டூவர்டு பிராட் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.