நீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
farmers-in-telangana

பட்டா இருந்தாலும் விவசாய நிலங்களை பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். பட்டாவை புதுப்பித்துத் தர மறுக்கிறார்கள். ‘ரைத்து பந்து’ விவசாய உதவித் தொகையும் தருவதில்லை என்று தெலங்காணா மகபூபாபாத் மாவட்டம் பய்யாரம் மண்டலம் கஸ்தூரி நகரில் விவசாயிகள் ஹை டென்ஷன் மின்சார டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். 1500 ஏக்கரில் சென்ற அரசாங்கம் பட்டா கொடுத்தது. ஆனால் தற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடிவு செய்தது என்று வருந்தினார்கள்.

தங்களது சோளப் பயிருக்குத் தகுந்த விலை நிர்ணயிக்க வேண்டும். அதிகாரிகளும் தலைவர்களும் கண்டு கொள்வதில்லை. தமக்கு நீதி கிடைக்காவிடில் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மின்சார கோபுத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.