ராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
military canteen - 2026

இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் மது வகைகள் உள்பட, வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

ராணுவ கேன்டீன்களுக்கு வெளிநாட்டு பொருட்கள் எதுவும் இனி நேரடியாக கொள்முதல் செய்யப்படக் கூடாது; உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் 4,000 ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 5,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றில் சுமார் 400 பொருட்கள் இறக்குமதிப் பொருட்கள். இவற்றில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களின் தயாரிப்புகளாகவே இருக்கும். இனி இவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.