
2019-20ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது மத்திய அரசு.
2019-20ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா கால நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்வதற்கும், வெளிநாடு மற்றும் குறிப்பிட்ட அளவுடைய உள்ளூர் பரிவர்த்தனை கணக்குகளை தாக்கல் செய்வற்கான அவகாசமும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான சுயமதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கான அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.